செவ்வாய், 31 மே, 2016

கட்டுரைப் பயிலரங்கு 2016

அரையாண்டு விடுமுறை வகுப்புகளின்போது, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 


மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு கட்டுரையை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கான உத்திகளை அறிந்துகொண்டனர். பயிலரங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


புதன், 25 மே, 2016

வெற்றி வாகை சூடிய மாணவர்கள்


இவ்வாண்டு பள்ளிப் பருவத்தின் முதல் பாதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்!!!! 

திங்கள், 23 மே, 2016

'கனவு நனவாகிறது' 2016


20 மே அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான காவியா, இனியா, மஃவுசா, சைனப், ஹெம்ராஜ், டிவேஷ் ஆகியோர் கனவு நனவாகிறது 2016 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

‘வி.ஐ.பி கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! 

போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



வெள்ளி, 20 மே, 2016

எங்கள் முதல் கூட்டு முயற்சி


பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவும் கல்வி அமைச்சின் பிளாங்கா ரைஸ் பாலர் பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவும் இணைந்து 19 மே 2016 அன்று ஒரு கூட்டு முயற்சியில் இணைந்தன. 

பாலர் பள்ளி தமிழ் மாணவர்களும் தொடக்கப்பள்ளி ஒன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களும் ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதோடு அவர்கள் ஓன்றுசேர்ந்து சில நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டனர். 

அந்த நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 





திங்கள், 16 மே, 2016

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2016

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 13 மே 2016 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்கள் தங்கள் படைப்புகளை மற்ற மாணவர்களிடம் படைக்கும் வண்ணம் இந்தக் கூட்டம் அமைந்தது. 

மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: