வியாழன், 16 மே, 2013

மின்மினிகள் 2013



 








S2 குழுமப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டாக மின்மினிகள் 2013 என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இது 13 ஏப்ரல் 2013 அன்று நம் பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்மொழிப் போட்டிகளோடு தகவல் தொழில்நுட்பப் போட்டியும் நடைபெற்றது. நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.

 






பாட்டுப்போட்டியில் 1 Amethyst வகுப்பைச் சேர்ந்த காவியதர்ஷினி முதல் பரிசு கிடைத்தது.
 
 












காட்டிப் பேசுவோம் போட்டியில் 2 Topaz வகுப்பின் முகமது நூருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

 








கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்ற 3 Ruby வகுப்பைச் சேர்ந்த ராம்குமாருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 4 Ruby வகுப்பைச் சேர்ந்த தேவதர்ஷினியும் ரியாஸும் பங்குபெற்ற நாடகப்போட்டியில் அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற 5 Opal வகுப்பைச் சேர்ந்த ஜீவிதாவுக்கு ஆறுதல் பரிசும் விளம்பரப் போட்டியில் பங்குபெற்ற 6 Topaz வகுப்பைச் சேர்ந்த ஷாலினி மற்றும் ஜோஷிகா ஆகிய இருவருக்கும் இரண்டாம் பரிசும் கிடைத்தன. தகவல் தொழில்நுட்பப் போட்டியில் பிளாங்கா ரைஸ் குழுவுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
  
பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நம் அனைவருடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

செவ்வாய், 7 மே, 2013

தோரணம் கட்டுதல் பயிலரங்கு

10/04/2013 அன்று தமிழ் மாணவர்கள் அனைவரும் தத்தம் தமிழ்ப் பாடவேளைகளின்போது தோரணம் கட்டுதல் பயிலரங்கு ஒன்றில் பங்குபெற்றார்கள். தோரணம் என்றால் என்ன, அதை எந்த நிகழ்ச்சிகளில் கட்டுவார்கள், அதை எப்படிக் கட்டுவார்கள் போன்ற பல விவரங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். பின், தோரணம் கட்டுதல் நடவடிக்கையிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
 

 

 

 

 

 

 

 

 

 

 


 

நூலகச் சுற்றுலா

09/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் தமிழ் மாணவர்கள் புக்கிட் மேரா நூலகத்திற்குக் கல்விச் சுற்றுலா மேற்கொண்டார்கள். நூலகத்தில் வழங்கப்படும் சேவைகள் பற்றி அறிந்துகொண்டதோடு அங்கு உள்ள வசதிகள் பற்றியும் தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொண்டார்கள். மேலும், மின்வசதிகள் பற்றியும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் உள்ள வசதிகள், புத்தகங்கள் குறித்து அவர்கள் தமிழ் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலமுறை நூலகத்திற்கு வந்திருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.